

சென்னை,
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சியான் 63’படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விக்ரமுடன் இணைந்து நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நடிகை ரியா ஷிபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்வம் மாயா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரியா ஷிபு, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் அவர்களின் மகளும் ஆவார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றவுள்ளனர். மேலும், படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', காலா ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பீட்சா, சூது கவ்வும், வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 'பரியேறும் பெருமாள், இறுதிச்சுற்று, கர்ணன், ஜகமே தந்திரம், ஜகமே தந்திரம், ரெட்ரோ போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்
இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளையொட்டி ‘சியான் 63’ படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.