தமிழில் அறிமுகமாகும் “கேஜிஎப்” இசையமைப்பாளர்


தமிழில் அறிமுகமாகும் “கேஜிஎப்” இசையமைப்பாளர்
x
தினத்தந்தி 21 Aug 2025 10:45 AM IST (Updated: 21 Aug 2025 10:51 AM IST)
t-max-icont-min-icon

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை இயக்கிய ஏஜிஎஸ் நிறுவனம் இயக்க உள்ளது. அப்பா - மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இப்படம் உருவாக உள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நேற்று தொடங்கியது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம மூலம் கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பசூர் தமிழில் அறிமுகமாகிறார்.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 28 -வது படம் இது.

1 More update

Next Story