“முஸ்தபா முஸ்தபா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள “முஸ்தபா முஸ்தபா” படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்.
“முஸ்தபா முஸ்தபா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது சுரேஷ் ரவியுடன் இணைந்து முஸ்தபா முஸ்தபா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார்.

பிரவீன் சரவணன் இயக்கிய இந்த படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள முஸ்தபா முஸ்தபா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், முஸ்தபா முஸ்தபா படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வருகிற மார்ச் மாதம் 6ந் தேதி வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com