10 கோடி பார்வைகளை கடந்த “யூத்” படத்தின் “முட்ட கலக்கி” பாடல்

கென் கருணாஸின் ‘யூத்’ படம் வருகிற 16ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
10 கோடி பார்வைகளை கடந்த “யூத்” படத்தின் “முட்ட கலக்கி” பாடல்
Published on

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மார்ச் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற ‘முட்ட கலக்கி’ பாடல் யூடியூபில் 10 கோடிபார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இப்பாடலை கென் எழுதி, பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற 16ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com