'என்னுடைய 544-வது படம்...'- பிரபாசுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் பதிவு


my 544th film with Prabhas - Anupam Kher
x
தினத்தந்தி 14 Feb 2025 3:33 PM IST (Updated: 14 Feb 2025 3:48 PM IST)
t-max-icont-min-icon

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

ஐதராபாத்,

சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் இமான்வி நடிக்கிறார். இது இவரது அறிமுக படமாகும்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இணைந்திருக்கிறார். இதனை அனுபம் கெர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,

'இந்திய சினிமாவின் பாகுபலியுடன் எனது 544வது படம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் 'கார்த்திகேயா 2' மற்றும் 'டைகர் நாகேஸ்வர ராவ்' படங்களுக்குப் பிறகு இவர் நடிக்கும் மூன்றாவது தெலுங்குப் படமாக இது இருக்கிறது.

1 More update

Next Story