'தீக்குச்சிபோல இருக்கிறாய்'...உருவக்கேலி குறித்து மனம் திறந்த அனன்யா பாண்டே


My body is filling out: Ananya Panday shuts down getting butt done rumours
x
தினத்தந்தி 17 May 2025 8:18 AM IST (Updated: 17 May 2025 8:43 AM IST)
t-max-icont-min-icon

தான் ஒல்லியாக இருந்தபோது பலர் தன்னை உருவக்கேலி செய்ததாக அனன்யா கூறி இருக்கிறார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, தனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும்போது பலர் தன்னை உருவக்கேலி செய்ததாக கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

'எனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும்போது இந்த விமர்சனங்கள் ஆரம்பித்தன. நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். உனக்கு கோழி கால்கள் உள்ளன. நீ தீக்குச்சிபோல இருக்கிறாய் என்றெல்லாம் கூறினர். இப்போது நான் வளர்ந்து வருகிறேன், அப்படி இல்லை.

இப்போதும் நீ அறுவை சிகிச்சை செய்து விட்டாய். அதை செய்துவிட்டாய், இதை செய்துவிட்டாய் என சொல்கிறார்கள். நீங்கள் எந்த ஷேப்பில் இருந்தாலும், எந்த சைசில் இருந்தாலும் சரி. மக்கள் தொடர்ந்து ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

அதுவும் குறிப்பாக பெண்களைத்தான் விமர்சிக்கிறார்கள். ஆண்களை அப்படி செய்ததாக எனக்குத் தெரியவில்லை. பெண்கள் மீதுதான் இந்த வெறுப்பு அதிகமாக இருக்கிறது' என்றார்.

1 More update

Next Story