துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை - திஷா பதானி தந்தை விளக்கம்


துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை - திஷா பதானி தந்தை விளக்கம்
x

சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திஷா பதானி அறிமுகமானார்.

உத்தர பிரதேசம்,

தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'லோபர்' திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. தொடர்ந்து 'எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதனைதொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி நகரில் உள்ள நடிகை திஷா பதானியில் வீட்டின் முன் நேற்று அதிகாலை இருவர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பலமுறை துப்பாக்கி நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர். இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக ரோஹித் கோதாரா - கோல்டி பிரார் கும்பல் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிசூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதத்திற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரெய்லர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்​பவம் குறித்து திஷா பதானி​யின் தந்தை ஜெக​திஷ் சிங் பதானி கூறும்​போது, “எனது மூத்த மகள் குஷ்பு பதானி​யின் (திஷா பதானி சகோ​தரி) கருத்து தவறாக புரிந்​து​கொள்​ளப்​பட்​டுள்​ளது. நாங்​கள் சனாதனிகள். சாதுக்​களை நாங்​கள் மதிக்​கிறோம். இந்த விவ​காரத்​தில் எங்​களுக்கு எதி​ராக சதி நடந்​துள்​ளது. துப்​பாக்​கி​யால் சுடும் அளவுக்கு என் மகள் எது​வும் அநாகரி​க​மாக பேச​வில்​லை. அனிருதா ஆச்​சார்யா பெண்​கள் குறித்து ஒரு கருத்து தெரி​வித்​தார். என் மகள் ஒரு கருத்து தெரி​வித்​தார். அனை​வருக்​கும் கருத்து சுதந்​திரம் உள்​ளது’’ என்​றார்.

திஷா பதானி​யின் சகோ​தரி குஷ்பு பதானி, கடந்த ஜூலை மாதம், அனிருதா ஆச்​சார்யா பெண்​களை வெறுக்​கும் வகை​யில் கருத்து தெரி​வித்​திருப்​ப​தாக குற்​றம் சாட்​டி​யிருந்​தார். ஆனால் இந்​தக் கருத்து ஆன்​மிக தலை​வர் பிரே​மானந்த் ஜி மகராஜை அவம​திக்​கும் வகை​யில் இருப்​ப​தாக செய்தி வெளி​யானது. இதற்கு குஷ்பு உடனடி​யாக மறுப்பு தெரி​வித்​திருந்​தார்.

1 More update

Next Story