'என் அன்பு சகோதரா... 'கங்குவா' படத்தை பார்த்த நடிகர் மாதவன் பதிவு


My dear brother... actor Madhavan posts after watching the movie Kanguva
x

'கங்குவா' படத்தை பார்த்த நடிகர் மாதவன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் 'கங்குவா'. இதுவரை ரூ.130 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படத்தில் அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சூர்யாவையும் பலர் விமர்சித்து வந்தனர். இதற்கு நடிகை ஜோதிகா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 'கங்குவா' படத்தை பார்த்த நடிகர் மாதவன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"நேற்று இரவு கங்குவாவை திரையில் பார்த்தேன், உங்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியப்படைந்தேன் என் அன்பு சகோதரா.. நீங்கள் செய்ததில் பாதியையாவது நான் செய்ய விரும்புகிறேன். அற்புதமான முயற்சி' இவ்வாறு தெரிவித்துள்ளார்

நடிகர் மாதவன், தற்போது அதிர்ஷ்டசாலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்குகிறார்.

1 More update

Next Story