எனக்கு `பிடித்த இடம்: அம்மாவின் நினைவிடம் தான்' - ஏ.ஆர்.ரகுமான் பேச்சு

எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பாடல் கேட்க மாட்டேன் என ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
எனக்கு `பிடித்த இடம்: அம்மாவின் நினைவிடம் தான்' - ஏ.ஆர்.ரகுமான் பேச்சு
Published on

சென்னை,

இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்ட பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-

பெத்தி திரைப்படம் உங்களைக் கவரும் என நம்புகிறேன். இப்படத்தில் இசையமைத்த சிக்கிரி பாடல் மெக்ஸிகோவில் அங்குள்ள பாடல்களைப் பின்னுக்குத் தள்ளி அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஓய்வாக இருக்கும்போது என்ன செய்வீர்கள் என்கிற கேள்விக்கு, "நான் ஓய்வாக இருக்கும்போது பாடல்களைக் கேட்க மாட்டேன். என் குழந்தைகளுடன்தான் நேரம் செலவிடுகிறேன். ஏதாவது படம் பார்ப்பேன். சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் எனது அம்மாவின் நினைவிடம்தான்." எனக் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com