’என் `அடங்காதே’ படமும்தான் வெளிவரல..ஏன் யாரும் குரல் கொடுக்கல?’’ - சரத்குமார்


My film adangathey  also hasnt been released due to censorship issues... Why is no one speaking up about it? - Sarathkumar
x
தினத்தந்தி 10 Jan 2026 10:34 PM IST (Updated: 10 Jan 2026 10:42 PM IST)
t-max-icont-min-icon

’பராசக்தி’ திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்றுதான் வந்தது என்று சரத்குமார் கூறினார்.

கோவை,

கோவையில் பாஜக பிரமுகரும், நடிகருமான சரத்குமார் இன்று (ஜன. 9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்று குறித்து சென்சார் வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சரத்குமார், சென்சார் போர்டு தற்போது மட்டும் ஒரு படத்தை நிறுத்தவில்லை. இதற்கு முன்பே பல்வேறு படங்களை நிறுத்தி உள்ளார்கள். நான் நடித்த 'அடங்காதே' படமும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. அது அரசியல் சதியா? அதில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் ஏற்புடையது அல்ல என்று முடிவெடுத்து இருக்கிறார்கள், அதனால் அந்த படம் வெளியாகவில்லை.

ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் இதனை ஒரு செய்தியாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க நினைப்பது அங்கிருந்து இங்கு வந்த எனக்கு வேதனையாக இருக்கிறது. சென்சார் போர்டுக்கு நான் என்றும் குரல் கொடுத்தது கிடையாது. மேலும் என்னுடைய 'அடங்காதே' திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க கூறுங்களேன். பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்றுதான் வந்தது' என்றார்.

1 More update

Next Story