ரசிகர்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடிப்பதே லட்சியம் - நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு

இவர் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ரசிகர்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடிப்பதே லட்சியம் - நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு
Published on: 

மும்பை,

‘அனிமல்’ படம் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது; இனி நல்ல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்வேன் என நடிகை திரிப்தி டிம்ரி தெரிவித்துள்ளார்.

‘அனிமல்’ படத்தின் மூலம் பிரபலம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் திரிப்தி டிம்ரி. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மாம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார்.

தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

ரசிகர்களின் இதயங்களைக் கவர்வதே இலக்கு

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரிப்தி டிம்ரியிடம், அவரது தற்போதைய லட்சியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக இடம்பிடிப்பதே தனது இலக்கு என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ரசிகர்களின் மனதில் நான் பிடித்த இடத்தை வேறு யாராலும் அபகரிக்க முடியாத வகையில் வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும். ‘அனிமல்’ திரைப்படம் எனக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் நல்ல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளேன். ரசிகர்கள் உஷாராக இருந்து கொள்ளுங்கள்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com