கமல் தான் என் ஹீரோ, என் நண்பன் - குஷ்பு

'கமல்ஹாசன் தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய நண்பர்’ என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கமல் தான் என் ஹீரோ, என் நண்பன் - குஷ்பு
Published on

கமல்ஹாசனும், குஷ்புவும் அரசியலில் எதிரெதிராக இருந்தாலும் நெருங்கிய நட்புடன் உள்ளனர். இருவரும் இணைந்து நடித்த மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஊழல் குறித்து ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து எதிர்ப்புக்கு உள்ளானபோது குஷ்பு "உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. என்ன நடந்தாலும் ஒரு தோழியாக நான் உங்கள் பின்னால் நிற்பேன். நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள்" என்று கூறி ஆதரவு தெரிவித்து இருவருக்கும் இருக்கும் நட்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்துள்ள விக்ரம் படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதால் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசனை குஷ்பு நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு என் ஹீரோ, என் நண்பன், என் விக்ரம் என்ற பதிவையும் குஷ்பு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com