எனது அம்மா அழுதார்... காதல் வதந்தியால் நடிகை காட்டம்

தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷும் காதலிப்பதாக இணையதளங்களில் கிசுகிசுக்கள் பரவின. இதனால் எனது அம்மா அழுதார் என நடிகை அனு இம்மானுவேல் பேட்டியில் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
எனது அம்மா அழுதார்... காதல் வதந்தியால் நடிகை காட்டம்
Published on

தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்து பிரபலமானவர் அனு இம்மானுவேல். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுபிள்ளை படத்திலும் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அனு இம்மானுவேலும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷும் காதலிப்பதாக இணையதளங்களில் கிசுகிசுக்கள் பரவின. இதுகுறித்து அனு இம்மானுவேல் காட்டமாக அளித்துள்ள பதிலில், ''நான் எதிர்பாராத விதமாக சினிமாவுக்கு வந்தேன். சில வெற்றி படங்களிலும் சில தோல்வி படங்களிலும் நடித்து இருக்கிறேன். தற்பொழுது நான் அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடித்ததால் அவரை காதலிக்கிறேன் என்று வதந்தி பரப்பி உள்ளனர். நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் எனது அம்மா காதல் வதந்தியை பார்த்து அழுதுவிட்டார். என் அம்மாவின் வேதனையை பார்த்து நான் வருந்தினேன். ஊர்வசிவோ ராட்சசிவோ படத்திற்கு முன்பு எனக்கு அல்லு சிரீசை தெரியாது. அவரை சந்தித்தது கூட இல்லை. படத்தின் பூஜை அன்று மட்டுமே சந்தித்தேன். இந்த காலத்தில் கூட ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சேர்ந்து காபி குடித்தால் கூட விதவிதமான கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.'' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com