எனது பஞ்ச் டயலாக்கை பயன்படுத்தக் கூடாது: ஐகோர்ட்டில் பிரபல நடிகர் மனு

சமூக வலைதளங்களில் அனுமதியின்றி தனது பெயர், படம் மற்றும் பஞ்ச் டயலாக்கை பயன்படுத்த கூடாது என நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
எனது  பஞ்ச் டயலாக்கை பயன்படுத்தக் கூடாது: ஐகோர்ட்டில் பிரபல நடிகர் மனு
Published on

மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். 79 வயதான இவர், மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனுமதியின்றி தனது பெயர், படம் மற்றும் பஞ்ச் டயலாக்கை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

தனது அனுமதியின்றி பெயர், படம், பஞ்ச் டயலாக்கை (காமோஷ்) வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது அடிப்படை உரிமை மீறல் எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சர்மிளா தேஷ்முக் அமர்வு முன் நேற்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவுக்காக மற்றொரு நாளுக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com