’நான் நடித்ததிலேயே மிகவும் சவாலான கதாபாத்திரம் அது’ - கியாரா அத்வானி

கியாரா அத்வானி தற்போது டாக்ஸிக் படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் தற்போது யாஷின் டாக்ஸிக் படத்தில் நடித்துள்ளார். கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அவர் ‘நாடியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அதிக கவனம் பெற்றது.
கியாராவின் இந்த கதாபாத்திரம் அவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்த வரவேற்புக்கு கியாரா நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
’பல மாத கடின உழைப்பு. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் என்னிடமிருந்து அதிக உழைப்பை பெற்ற ஒரு கதாபாத்திரம் இது. நான் நடித்ததிலேயே மிகவும் சவாலான கதாபாத்திரம். இந்த பர்ஸ்ட் லுக்கிற்கு இவ்வளவு அன்பு கிடைப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று தெரிவித்திருக்கிறார்.






