“விரைவில் என் ஆசை நிறைவேறும்” - நடிகை டிம்பிள் ஹயாட்டி நம்பிக்கை

தென்னிந்திய அளவிலான சினிமாவில் கலக்க வேண்டும் என நடிகை டிம்பிள் ஹயாட்டி தெரிவித்துள்ளார்.
“விரைவில் என் ஆசை நிறைவேறும்” - நடிகை டிம்பிள் ஹயாட்டி நம்பிக்கை
Published on

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான டிம்பிள் ஹயாட்டி தமிழில் 'தேவி-2', 'வீரமே வாகை சூடும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு தாண்டி கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இது தவிர சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது கவர்ச்சி படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிம்பிள் ஹயாட்டியிடம், 'ஏன் தமிழில் படங்கள் தொடர்ச்சியாக நடிக்கவில்லை?', என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் அளிக்கையில், " தமிழ் சினிமாவில் நடிப்பது என்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அங்கு ரசிகர்களின் ஆதரவும், அன்பும் ஆச்சரியப்பட வைக்கும். தமிழில் நடிக்க எனக்கும் அதிக ஆசை உண்டு. விரைவில் அந்த ஆசை நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். தென்னிந்திய அளவில் கலக்க வேண்டும் என்பது என் ஆசை", என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com