ராஷ்மிகாவின் ’மைசா’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு

புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ராஷ்மிகாவின் ’மைசா’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு
Published on

சென்னை,

ராஷ்மிகா மந்தனாவின் பான்-இந்திய படங்களில் மைசாவும் ஒன்று. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தம்மா' நல்ல வசூலை ஈட்டியது. மேலும், அதைத்தொடர்ந்து வெளியான 'தி கேர்ள் பிரண்ட்' படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மைசா படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்கிறார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com