ராஷ்மிகாவின் ’மைசா’...முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் தேதி அறிவிப்பு


MYSAA the first glimpse on 24.12.25
x

புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சென்னை,

ராஷ்மிகா மந்தனாவின் பான்-இந்திய படங்களில் மைசாவும் ஒன்று. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தம்மா' நல்ல வசூலை ஈட்டி வருகிறது. மேலும், அதைத்தொடர்ந்து வெளியான 'தி கேர்ள் பிரண்ட்' படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ’மைசா’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 24-ம் தேதி அது வெளியாக உள்ளது.

புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்கிறார்

1 More update

Next Story