சிவகார்த்திகேயன் படத்தில் மிஷ்கின்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் படத்தில் மிஷ்கின்
Published on

'டான்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. அழுத்தமான அந்த கதாபாத்திரத்தில் மிஷ்கின் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் அஸ்வின் மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டாராம். இதனால் சிவகார்த்திகேயன் படத்தில் முதன் முறையாக மிஷ்கின் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com