டிரெண்டிங்கில் முதலிடத்தில் 'நா ரெடி' பாடல்... 20 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று லியோ திரைப்படத்தின் 'நா ரெடி' பாடலின் வீடியோ நேற்று வெளியானது.
டிரெண்டிங்கில் முதலிடத்தில் 'நா ரெடி' பாடல்... 20 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் வெளியான முதல் நாளில், உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. மேலும் இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்றும், வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று 'லியோ' திரைப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 20 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த பாடல் யூடியூப் தளத்தில் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com