'லியோ' படத்தில் இருந்து 'நா ரெடி' பாடல் வெளியானது

'லியோ' படத்தில் இருந்து 'நா ரெடி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'லியோ' படத்தில் இருந்து 'நா ரெடி' பாடல் வெளியானது
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படத்தில் இருந்து "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

முன்னதாக 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். தொடர்ந்து 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளில் சரியாக 12 மணிக்கு லோகேஷ் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது 'நா ரெடி' பாடலை 'லியோ' படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

#NaaReady is all yours now!
Thank you for making this a special one @actorvijay nahttps://t.co/LKksHYMCY5
#Leo pic.twitter.com/jH8opfyJVI

Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 22, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com