நடிகைகளுக்கு கவர்ச்சியும் தேவையான ஒன்றுதான் - திஷா பதானி

கவர்ச்சி என்றாலே ஏன் தவறான கண்ணோட்டம் கொண்டு பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை என்று திஷா பதானி தெரிவித்துள்ளார்.
திஷா பதானி
கோப்புப்படம்
Published on

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் திஷா பதானி, சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்தில் நடித்தார். தற்போது 'அவராபன்-2', 'வெல்கம் டூ ஜங்கிள்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எந்த விழாக்களுக்கு சென்றாலும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் உடைகளை அணிந்து கலக்குவது திஷா பதானியின் வழக்கம். அவ்வப்போது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "கவர்ச்சி என்றாலே ஏன் தவறான கண்ணோட்டம் கொண்டு பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. நடிகைகளுக்கு கவர்ச்சியும் தேவையான ஒன்று தான். ஆண்கள் தங்கள் கட்டுடலை காட்டி புகைப்படம் வெளியிடும்போது, 'கடின உழைப்பு, விடாமுயற்சி' என்கிறார்கள்.

நடிகைகள் கவர்ச்சியை கையில் எடுத்தால் போதும் உடனே 'அப்படி, இப்படி' என்கிறார்கள். இந்த போக்கு மாறினால் சினிமா இன்னும் வளர்ச்சி காணும். மாறவேண்டியது தவறான கண்ணோட்டம் உள்ளவர்களே..." என்று குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com