

1950 மற்றும் 60களில், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சாவித்ரி, சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து, சொத்துக்களை இழந்து 46 வயதில் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் படமாக வெளியானது. இதில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவருடன் துல்கர் சல்மான், சமந்தா, மற்றும் பிரகாஷ் ராஜ், நாகசைதன்யா, விஜய் தேவரகொண்டா உட்பட பலர் நடித்திருந்தனர்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து, நாக் அஸ்வின் இயக்கிய படம், ‘நடிகையர் திலகம்’. சாவித்திரியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கில் உருவான இப்படம் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்காகக் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படம் வெளியாகி 8 வருடம் ஆனது.
இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “என் மனதுக்கு நெருக்கமான படம் என்றால் நிச்சயமாக ‘நடிகையர் திலகம்’ படமாகத்தான் இருக்கும். அது மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம். அந்த வேடத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. உணர்வுப்பூர்வமாகவும் மனதளவிலும் முழுமையாக என்னை அதில் அர்ப்பணித்தேன். ஒரு கட்டத்தில், அந்த கதாபாத்திரத்தில் மூழ்கி, என்னையே அதில் தொலைத்துவிட்டேன்” என்றார்.