நடிகர் சங்க கட்டிட பணிகள் 4 மாதத்தில் நிறைவு; விஷால்


நடிகர் சங்க கட்டிட பணிகள் 4 மாதத்தில் நிறைவு;  விஷால்
x
தினத்தந்தி 18 May 2025 11:06 AM IST (Updated: 18 May 2025 2:49 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் உள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் ஏற்கனவே அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷால் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஷால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும்போது நல்ல உணர்வு கொடுக்கும். நன்றாக உழைக்க வேண்டும். சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வை கொடுக்கக்கூடிய முக்கியமான கோவில் இது. இங்குள்ளவர்கள் என்னை மதுரைக்காரன் என நினைப்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன். அடுத்த 4 மாதத்தில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிவு பெற்றுவிடும்' என்றார்.

1 More update

Next Story