'நாடோடிகள்' பட நடிகை அபிநயாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

நடிகை அபிநயாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் அபிநயா. வாய் பேச முடியாத இவர் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான 'நாடோடிகள்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 'குற்றம் 23, மார்க் ஆண்டனி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிக மொழிகளில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரராகவும் திகழ்ந்து வருகிறார் அபிநயா.
இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் அப்போது அந்த புகைப்படங்களை அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் தற்போது அபிநயா அவரது வருங்கால கணவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது கணவர் கார்த்திக் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்து. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






