'புஜ்ஜி' காரை ஓட்டிப் பார்க்க எலான் மஸ்கிற்கு அழைப்பு

புஜ்ஜி காரை சமீபத்தில் நடிகர் நாகசைதன்யா ஓட்டிப் பார்த்தார்.
Nag Ashwin invites Elon Musk to drive Bujji from Kalki 2898 AD
Published on

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த வாரம் கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான "புஜ்ஜி" அறிமுகம் ஆனது.

இந்த புஜ்ஜி காரை சமீபத்தில் நடிகர் நாகசைதன்யா ஸ்பெஷலாக ஓட்டிப் பார்த்தார். இந்நிலையில், புஜ்ஜியை ஓட்டி பார்க்க எலான் மஸ்கிற்கு இப்படத்தின் டைரக்டர் நாக் அஸ்வின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் சார், 'புஜ்ஜி'காரை ஓட்டி பார்க்க உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். 'கல்கி 2898 ஏடி' படம் அடுத்த மாதம் 27-ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com