தலைசிறந்த படைப்பு...''குபேரா''வை பாராட்டிய ''கல்கி 2898 ஏடி'' இயக்குனர்

தனுஷ் மகத்தான பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
சென்னை,
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ''குபேரா'' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
குறிப்பாக தனுஷ் மகத்தான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்நிலையில், ''கல்கி 2898 ஏடி'' இயக்குனர் நாக் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குபேரா படம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குபேராவை ''தலைசிறந்த படைப்பு'' என்றும் பார்வையாளர்களை ''அதிகம் யோசிக்காமல்'' சென்று பார்க்குமாறும் கூறி இருக்கிறார்.
ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலித்த ஒரு திரைப்பட இயக்குனரிடமிருந்து இவ்வளவு உயர்ந்த பாராட்டு கிடைத்திருப்பது ''குபேரா'' மீதான கவனத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.






