மீண்டும் இணைந்த சுஹாஸ் - ஷிவானி


Nag Ashwin launches Suhas’s new film with debutant Gopi Atchara
x

சுஹாஸ் தமிழில் சூரியுடன் ''மண்டாடி'' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

''கலர் போட்டோ'', ''ரைட்டர் பத்மபூஷண்'', ''அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்'' போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சுஹாஸ், அறிமுக இயக்குனர் கோபி அட்சரா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. ''அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்''-ல் சுஹாஸுடன் நடித்த ஷிவானி நகரம் இதிலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மேலும், நரேஷ், சுதர்ஷன் மற்றும் அன்னபூர்ணம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுஹாஸ் தமிழில் சூரியுடன் ''மண்டாடி'' படத்திலும் நடித்து வருகிறார்.

1 More update

Next Story