''தீபிகா படுகோனேவின் கதாபாத்திரம் இல்லாமல், கல்கி இல்லை'' - நாக் அஸ்வின்


Nag Ashwin: Without Deepikas character, there is no Kalki
x

தற்போது, ''கல்கி'' படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை,

''கல்கி 2898 ஏடி'' திரையரங்குகளில் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இயக்குனர் நாக் அஷ்வின், தீபிகா படுகோனே கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை பற்றி பகிர்ந்துகொண்டார்

அவர் கூறுகையில், "தீபிகா படுகோனே, கதையில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தை நீக்கினால், கதை இல்லை. கல்கி இல்லை." என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், உலகளவில் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக அமைந்தது.

தற்போது, படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில், தீபிகா மீண்டும் சுமதி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story