திருப்பதியில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா


திருப்பதியில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்த நாக சைதன்யா
x

நடிகர் நாக சைதன்யா மனைவி சோபிதாவுடன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

நாக சைதன்யா, நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகரும் ஆவார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பின்னர், பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா மனைவி சோபிதாவுடன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சாமி சிலை ஒன்று கொடுக்கப்பட்டது.

1 More update

Next Story