மனைவி சோபிதாவுடன் நடிக்க உள்ள நாக சைதன்யா ?


Naga Chaitanya opens up about working with his wife
x

கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

ஐதராபாத்,

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் ஒன்றாக இதுவரை எந்த படத்திலும் நடிக்காதநிலையில், நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் அது நடக்கும் என்று நடிகர் நாக சைதன்யா கூறி இருக்கிறார். 'தண்டேல்' படத்தின் புரமோஷனின்போது இதனை தெரிவித்தார்.

அதன்படி, அவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை என்றாலும், நல்ல ஸ்கிரிப்ட் வந்தால், தனது மனைவி சோபிதாவுடன் இணைந்து பணியாற்றலாம் என்று கூறினார்.

1 More update

Next Story