சமந்தாவுடன் மண வாழ்க்கை முடிந்துபோன அத்தியாயம் - நடிகர் நாக சைதன்யா

சமந்தாவுடான மண வாழ்க்கை முடிந்துபோன அத்தியாயம் என்று நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார்.
சமந்தாவுடன் மண வாழ்க்கை முடிந்துபோன அத்தியாயம் - நடிகர் நாக சைதன்யா
Published on

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். பிரிவுக்கான காரணத்தை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிகள் நடந்து வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமான நாகசைதன்யா கூறும்போது, ''எனது சொந்த வாழ்க்கையை பற்றி பேசுவதை கேவலமாக நினைக்கிறேன். நான் ஒரு நடிகன். எனது நடிப்பை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையை பற்றி மற்றவர்கள் பேசுவதை விரும்பவில்லை. சினிமா வாழ்க்கையை விட நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத்தான் பரபரப்பாக்குகிறார்கள். சினிமா துறையில் நான் சாதித்ததை பற்றி யாரும் பேசுவது இல்லை.

எங்கள் திருமண வாழ்க்கை முடிந்து போன அத்தியாயம். அதை நானும், சமந்தாவும் அறிக்கையாக வெளியிட்டோம். அது குறித்து இப்போது புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் வழி அவருடையது. என் வழி என்னுடையது. இந்த விஷயத்தில் இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com