கார் பந்தய பயிற்சியில் நாக சைதன்யா - சோபிதா ஜோடி

நட்சத்திர தம்பதிகளான நாக சைதன்யா - சோபிதா ஜோடி சென்னையில் கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்
Naga Chaitanya - Sobitha pair in car racing training
Published on

சென்னை,

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நட்சத்திர தம்பதிகளான நாக சைதன்யா - சோபிதா ஜோடி சென்னையில் கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பகிர்ந்துள்ள நாக சைதன்யா, இந்த நாள் அருமையாக சென்றதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மறுபுறம் சோபிதா, கார் பயிற்சியின்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com