மீனாட்சி சவுத்ரியின் ’என்சி24’ - மேக்கிங் வீடியோ வெளியீடு


Naga Chaitanya’s NC24: BTS video unveiled
x

இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

நாக சைதன்யா, இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு கூட்டணியில் உருவாகி வரும் புராண திரில்லர் படத்திற்கு தற்காலிகமாக ’என்சி24’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் இப்போது ஒரு சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும், நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 23 ஆம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்..

’என்சி24’ படத்தில் லாபட்டா லேடீஸ் நடிகர் ஸ்பர்ஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் கீழ் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் பி. லோக்நாத் இசையமைக்கிறார்.

1 More update

Next Story