ரூ.95 கோடி வசூலை கடந்த நாக சைதன்யாவின் "தண்டேல்"

நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ படம் உலக அளவில் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரூ.95 கோடி வசூலை கடந்த நாக சைதன்யாவின் "தண்டேல்"
Published on

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் உலக அளவில் வெளியான படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்னர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

கடந்த 7ம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ. 42.20 கோடி வசூலித்தது.

இந்நிலையில் 'தண்டேல்' படம் உலக அளவில் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com