"எனக்கு வரப்போகும் கணவர் இப்படித்தான் இருக்கணும்" - நடிகை அனன்யா

அனன்யா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
"எனக்கு வரப்போகும் கணவர் இப்படித்தான் இருக்கணும்" - நடிகை அனன்யா
Published on

ஐதராபாத்,

பவன் கல்யாணின் 'வக்கீல் சாப்' திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான இளம் நடிகை அனன்யா நாகல்லா, தனது சினிமா பயணம், காதல் மற்றும் காஸ்டிங் கவுச் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆரம்பத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் குறும்படங்கள் வழியாக சினிமாவுக்குள் நுழைந்த இவர், 'மல்லேஷம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த அனன்யாவுக்கு, பவன் கல்யாண் நடித்த 'வக்கீல் சாப்' திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதற்கிடையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அனன்யா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "சிறுவயதிலிருந்தே மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். ஆனால், நடிகர் நாக சௌர்யா தான் எனது முதல் கிரஷ்’ என்றார்.

மேலும், வருங்கால கணவர் குறித்து பேசுகையில், ‘எனக்கு வரப்போகும் கணவர் மிகவும் நேர்மையானவராக இருக்க வேண்டும். தற்போது எனக்கான சரியான நபருக்காகக் காத்திருக்கிறேன். ஆனால், சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுடன் காதலோ அல்லது ரிலேஷன்ஷிப்போ வைத்துக்கொள்ள எனக்கு ஒருவித பயம் உள்ளது’ என்றார்.

தொடர்ந்து காஸ்டிங் கவுச் குறித்து பேசுகையில், ‘சினிமாவில் நுழையும் போது நான் இதுவரை எந்தவொரு 'காஸ்டிங் கவுச்' அனுபவங்களையும் எதிர்கொண்டதில்லை. அதேபோல், சமூக வலைதளங்களில் என்னை பற்றி வரும் டிரோல்கள் அல்லது நெகட்டிவ் கமெண்ட்டுகளை நான் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை" என்றார்.

மிகக் குறுகிய காலத்தில் தனது கவர்ச்சி மற்றும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அனன்யா நாகல்லா, தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளுடன் பிஸியாக வலம் வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com