அல்லு அர்ஜுன்- திரிவிக்ரம் படம் இந்தியாவையே ஆச்சரியப்படுத்தும் - தயாரிப்பாளர் தகவல்


Naga Vamsi – Allu Arjun & Trivikram’s film will leave the nation surprised
x
தினத்தந்தி 26 March 2025 9:35 AM IST (Updated: 26 March 2025 1:29 PM IST)
t-max-icont-min-icon

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என தெரிகிறது.

ஐதராபாத்,

புஷ்பா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் ஒரு படம் பண்ண உள்ளார். ஆனால், அதற்கு முன்பு அட்லீ படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் நாக வம்சி தற்போது தயாரித்துள்ள மேட் ஸ்கொயர் படத்தின் புரமோசனின்போது, அல்லு அர்ஜுன்- திரிவிக்ரம் படம் குறித்து அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில்,

'அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் சாருடன் எங்களின் படம் முழு இந்தியாவையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு புராண படம். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட படங்கள் போலில்லாமல், இதுவரை கேள்விப்படாத புராணக் கதையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

மக்கள் அந்தக் கடவுளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள், ஆனால் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியாது. அதை மிகப்பெரிய அளவில் இப்படத்தில் காட்டுவோம்," என்றார்.

1 More update

Next Story