ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் - ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்து வரும் 'குபேரா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Nagarjuna apologizes after bodyguard pushes disabled fan
Published on

ஐதராபாத்,

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, தமிழில் 'ரட்சகன்', 'தோழா', 'பயணம்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் என்ற அந்தஸ்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்து வரும் 'குபேரா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக தனுஷ், நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகார்ஜுனாவிடம் அவருடைய தீவிர ரசிகரான முதியவர் ஒருவர் அருகில் வந்து தொட்டு பேச முயன்றார். அதனைப் பார்த்த நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். ஆனால் அதனை கவனிக்காமல் நாகார்ஜுனா அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, இந்த வீடியோ 'மனித நேயம் எங்கே போனது?' என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலானது. அதனைப் பார்த்த நாகார்ஜுனா தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இது என் கவனத்திற்கு இப்போதுதான் வந்தது, இது நடந்திருக்கக்கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்", இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com