செல்பி எடுப்பதை தவிர்த்த நாகார்ஜுனா... ஏன் தெரியுமா?

நாகார்ஜுனா சமீபத்தில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
தான் செல்பி எடுப்பதை தவிர்க்க காரணம் என்ன என்பதை நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

தான் செல்பி எடுப்பதை தவிர்க்க காரணம் என்ன என்பதை நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர், நாகார்ஜுனா. இவர் தமிழ், இந்தி உள்பட பல இந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு தெலுங்கில் "பிக்பாஸ்" நிகழ்ச்சியை பல வருடங்க ளாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் தானும் சைபர் கிரைம் மோசடியால் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

டிஜிட்டல் அரெஸ்ட்

அவர் பேசும்போது. "1977-ம் ஆண்டு நான் என்ஜினீயரிங் படிக்கும் காலத்திலேயே, இதுபோன்ற மோசடி செய்பவர்கள் பற்றி என்னுடைய ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர். எனக்கு தெரிந்தவர்கள் பலரும், டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க போலீஸ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. என்னிடமும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு மோசடி நபர். வங்கி ஊழியர் போல பேசி ஏமாற்றினார். அந்த நிகழ்வுக்குப் பிறகு நான் மிகவும் சுதாரிப்பாக நடந்து கொள்கிறேன். என்னுடைய போன் பாஸ்வேர்டை, மாதத்திற்கு ஒரு முறை மாற்றிவிடுவேன். வை-பை பாஸ்வேர்டையும் மாதம் ஒருமுறை மாற்றுவேன். என்னுடைய போனில், நான் செல்பி கூட எடுக்கமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com