'குபேரா' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.
'குபேரா' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா
Published on

ஐதராபாத்,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.  ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் நாகார்ஜுனா குபேரா படத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com