நாகார்ஜுனாவின் 100வது படம்: ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இந்த படத்தில் நாகார்ஜுனா 25 வயது முதல் 60 வயது வரை பல்வேறு தோற்றங்களில் திரையில் தோன்ற உள்ளார்.
நாகார்ஜுனாவின் 100வது படம்: ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Published on

சென்னை,

சமீபத்தில் வெளியான 'குபேரா மற்றும் கூலி' படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா. இவர் அடுத்ததாக நித்தம் ஒரு வானம், ஆகாசம் போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் தனது 100-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக கிங்100 என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதில் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடிப்பார்கள் என்றும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

இதற்கிடையில், இந்த படத்தில் நாகார்ஜுனா 25 வயது முதல் 60 வயது வரை பல்வேறு தோற்றங்களில் திரையில் தோன்ற உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக அதிநவீன டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியால், நாகார்ஜுனாவின் 100வது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com