2-வது திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா...!! பெண் யார் தெரியுமா...?

நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சமந்தா - நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

விவாகரத்தான பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகசைதன்யாவின் பெற்றோரான நாகார்ஜுன் மற்றும் அமலா இருவரும் நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு நாகசைதன்யா ஒகே சொல்லிவிட்டதாகவும், ஆனால், நடிகை வேண்டாம் என்று பெற்றோருக்கு கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும், அவர் நடிகை இல்லை என்றும் தெரியவந்துள்ளது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com