‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட நிபந்தனைகள் ஐகோர்ட்டு உத்தரவு

நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தை வெளியிட நிபந்தனைகள் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட நிபந்தனைகள் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நடிகர் ஆரி நடிப்பில் முகமது ஐசக் இயக்கத்தில், டிரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தன் குடும்பத்தினரின் அனுமதியை பெறாமல் தன் தந்தை பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரி நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த்பாபு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இந்த வழக்கின் இடைக்கால மனு மீதான உத்தரவை பிறப்பித்தார். அதில், நாகேஷ் திரையரங்கம் என்ற சினிமாவுக்கான பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்த திரைப்படம், நடிகர் நாகேஷையோ, நாகேஷ் தியேட்டரையோ குறிப்பிடவில்லை என்று தெரிவிக்கவேண்டும். மேலும், இந்த தியேட்டரில் இப்படத்தைத் திரையிடும்போது மேற்கண்ட தகவலை திரையிட வேண்டும். இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து ரூ.20 லட்சத்தை டெப்பாசிட் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com