நம்ரிதா கதைக்கு தேவையானவற்றை தயங்காமல் செய்வார்- தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன்


நம்ரிதா கதைக்கு தேவையானவற்றை தயங்காமல் செய்வார்- தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன்
x

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் வெளியான சட்டமும் நீதியும் தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சென்னை,

அறிமுக இயக்குனர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் 18 கிரியேட்டர்ஸ் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் கடந்த 18-ந்தேதி வெளியான தொடர் சட்டமும் நீதியும். ஜி 5 ஓ.டி.டி. தளத்தில் வெளியான இந்த தொடர் விமர்சனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த தொடர் வெளியாகி 51 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழை தொடர்ந்து இந்தி, தெலுங்கு மொழிகளிலும் விரைவில் வெளியாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் இந்த தொடர் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த தொடரின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசுகையில், "இந்த தொடர் படப்பிடிப்பின் போது பல கஷ்டங்கள் வந்தது. சினிமா மீது உள்ள ஆசையில் அங்கு சாதிக்க வேண்டும் என கணவர் பிரபாகரன் பல அவமானங்களை சந்தித்தார். அவரது கடின உழைப்பு தற்போது வெற்றி பெற்றுள்ளது. சரவணன் தொடரில் அசத்தி விட்டார். நம்ரிதா எங்கள் அழகி. கியூட்டான ஹீரோயின். அவர் கதைக்கு தேவையானவற்றை தயங்காமல் செய்வார்". என பேசினார்.

1 More update

Next Story