நான் பார்த்த முதல் முகம் நீ..! - வெளியானது வலிமை படத்தின் 2-வது பாடல்..!

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.
நான் பார்த்த முதல் முகம் நீ..! - வெளியானது வலிமை படத்தின் 2-வது பாடல்..!
Published on

சென்னை,

நடிகர் அஜித் குமார் நடிப்பில் டைரக்டர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக டைரக்டர் விக்னேஷ்சிவன் எழுதி யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் பாடியிருந்த 'நாங்க வேற மாறி' பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூடியூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் வலிமை படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஏற்கெனவே கடந்த 1-ந் தேதி பாடலின் புரோமோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை 'மதர் சாங்' என்ற அந்த பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலையும் டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com