

மும்பை,
பண்ணை வீட்டு வளாகத்திலேயே அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் முழங்கி மரியாதை கொடுத்தனர்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானா படேகர். இவர் தமிழில் 'பொம்மலாட்டம்', 'காலா' படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'காலா' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறன் கொண்டவர்.
சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த நானா படேகர், கோவாவில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை தனது நண்பருக்கு தனது உடல்நிலை சரியில்லை என்பதை செல்போனில் எஸ்.எம்.எஸ். வழியாக நானா படேகர் தெரிவித்துள்ளார். இந்த குறுந்தகவலை அவரது நண்பர் அதிகாலை 4 மணியளவில் பார்த்துள்ளார். பதறிப்போன நண்பர் இல்லத்துக்கு வர, தனது அறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அதிகாலை 5.10 மணியளவில் நானா படேகர் உயிரிழந்தார். அவருக்கு வயது 76. 'நானா படேகருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சுயநினைவின்றி வந்த அவருக்கு 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக சி.பி.ஆர். சிகிச்சை அளித்தும், அவரை மீண்டும் உயிர் பெறச்செய்ய முடியவில்லை' என்று டாக்டர்கள் தெரிவித்தனர். நானா படேகரின் மறைவு திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நடிகர் நானா படேகர் உடல் புனே அருகே கடக்வாஸ்லா பகுதியான தோஞ்சே என்ற அவரது சொந்த கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவாவில் மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் புனே, கடக்வாஸ்லா அருகே உள்ள தோஞ்சே கிராமத்தில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டிற்கு போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்டிருந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பண்ணை வீட்டு வளாகத்திலேயே அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் முழங்கி மரியாதை கொடுத்தனர். இந்திய திரைத்துறை மற்றும் சமூகப்பணிகளில் அவரது மகத்தான பங்களிப்பை போற்றும் வகையில், முழு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.