

ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்ட பின்னர், புனே அருகே டோண்ஜே பகுதியில் உள்ள அவரது 27 ஏக்கர் பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். இவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்திலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ள நானா படேகருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது.
இந்த நிலையில், நடிகர் நானா படேகர் நெஞ்சுவலி காரணமாக கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (வியாழன்) உயிரிழந்தார். அவருக்கு வயது 75. பல ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நானா படேகரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நானா படேகர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நானா படேகரின் உடல் இன்று மாலை சுமார் 5 மணியளவில் புனே கொண்டு வரப்பட உள்ளது. ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்ட பின்னர், புனே அருகே டோண்ஜே பகுதியில் உள்ள அவரது 27 ஏக்கர் பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராத்தி நாடகம், மராத்தி மற்றும் இந்தி திரையுலகில் நானா படேகர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது இறுதிச்சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.