

மும்பை,
பிரபல நடிகர் நானா படேகர் நேற்று முன்தினம் அதிகாலை கோவாவில் உள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந் தார். அவரது உடல் நேற்று முன்தினம் இரவு புனேயில் உள்ள பண்ணை வீட்டில் தகனம் செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு நடந்த 'ஹாரன் ஒகே பிளீஸ்' திரைப்பட குத்து பாடல் படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018-ம் ஆண்டு நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டில் ஆதா ரம் இல்லை என கூறி போலீசார் அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து இருந்தனர்.
இந்தநிலையில் நடிகர் நானா படேகர் மரணம் அடைந்த நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூகவலைதள பக் கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
'மீ டு' புகாருக்கு பிறகு எனது வாழ்க்கை நரகமாகிவிட்டது. நான் எங்கு சென்றாலும் குண்டர்கள் என்னை பின்தொடர்ந்த னர். கடந்த 2024-ம் ஆண்டில் எனது காரின் பிரேக் கம்பிகளை யாரோ துண்டித்து என்னை கொல்ல முயன்றனர். ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் செய்த குற்றங்கள் மறைந்துவிடாது. சிலர் என்னை அவரை மன்னித்துவிடும்படி கூறுகி றார்கள்.
ஆனால் அவர் என்னிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை. என்னை பொறுத்த வரை எனது வாழ்க்கையை நரகமாக்கிய ஒரு கொடிய அரக்கன் இப்போது அழிந்துவிட்டான். அவர் மறைந்த பிறகும் என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.