நானா படேகரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு - பிரபுதேவா இரங்கல்

பாலிவுட் நடிகர் நானா படேகர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

நானா படேகரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மாபெரும் இழப்பு - பிரபுதேவா இரங்கல்
Published on: 

புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது வலிமையான நடிப்பு, அபாரமான திறமை மற்றும் இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஆகியவை என்றும் நினைவுகூரப்படும்.என்று நடிகர் பிரபுதேவா பதிவிட்டுள்ளார்.

நானா படேகர்

பாலிவுட்டில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். இவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்திலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ள நானா படேகருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது.

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் நெஞ்சுவலி காரணமாக கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (வியாழன்) உயிரிழந்தார். அவருக்கு வயது 75. நடிகர் நானா படேகர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபு தேவா இரங்கல்

அந்தவகையில், நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா நடிகர் நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில். புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது வலிமையான நடிப்பு, அபாரமான திறமை மற்றும் இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஆகியவை என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com