படப்பிடிப்பில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு காயம் - இப்போது எப்படி இருக்கிறார்? - வெளியான தகவல்

நடிகர் பாலகிருஷ்ணா விரைவில் நலம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பாலகிருஷ்ணா
Published on

காகினாடா,

ஆந்திரப் பிரதேசத்தின் காகினாடாவில் நடைபெற்று வரும் 'என்பிகே111' (NBK111) திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா லேசான காயமடைந்தார்.

நந்தமுரி பாலகிருஷ்ணா

காகினாடா துறைமுகத்தில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணா நழுவி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

லேசான காயம்

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், 'என்பிகே111' படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின்போது பாலகிருஷ்ணாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனினும், கவலைப்பட வேண்டிய அளவுக்கு பாதிப்பு இல்லை. அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் வாழ்த்து

இதனைத்தொடர்ந்து, நடிகர் பாலகிருஷ்ணா விரைவில் நலம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com